யாழ்ப்பாண விஞ்ஞான சங்கத்தின் சமூக விஞ்ஞானப் பிரிவின் ஏற்பாட்டில் “பேரிடரை எதிர்கொள்ளல்: நல்லூரில் வெள்ளம்” எனும் தொனிப் பொருளிலான கருத்தமர்வு எதிர்வரும் சனிக்கிழமை (20.12.2025) காலை-09 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகக் கேட்போர் கூடத்தில் யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்க சமூக விஞ்ஞானப் பிரிவின் தலைவர் திருமதி.மைதிலி ரவீஸ்வரன் தலைமையில் நடைபெறவுள்ளது.
மேற்படி கருத்தமர்வில் “பருவநிலை மாற்றமும் வெள்ளப்பெருக்கும்” எனும் தலைப்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர். நாகமுத்து பிரதீபராஜா கருப்பொருளுரை நிகழ்த்துவார். இந்த நிகழ்வில் “மௌனம் கலைதல்” என்ற செயல்விளக்க அரங்கு, குழுநிலைக் கருத்தமர்வு ஆகிய நிகழ்வுகளும், பொதுமக்கள் பங்கேற்கக் கூடிய வகையில் கருத்தறியும் நிகழ்வும் நடைபெறும்.
பேரிடரை எதிர்கொள்ளல் எனும் குழுநிலைக் கருத்தமர்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வாழ்நாள் பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளையின் வழிபடுத்தலில் நடைபெறும். குறித்த நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விலங்கியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் கணபதி கஜபதி, புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர்களான கலாநிதி ஏ.அன்ரனிராஜன், கலாநிதி.பிரதீபா விபுலன், தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் வடக்குக்கான உதவிப் பொது முகாமையாளர் எந்திரி. ஏகாம்பரநாதன் ஜெகதீசன், யாழ். மாநகர சபையின் தலைமைப் பொறியியலாளர் ஏந்திரி இராசையா சுரேஸ்குமார், நீர்ப்பாசனப் பொறியியலாளர் எந்திரி. குணராஜ் சுஜீவன் மற்றும் நல்லூர்ப் பிரதேச உதவிச் செயலர் இராமலிங்கம் சிவகரன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரைகள் நிகழ்த்துவர்.






