பொல்பிதிகமவிரல் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு

பொல்பிதிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கும்புகுலேவ பகுதியில் வயலில் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கும்புகுலேவ பிரதேசத்தின் மஹாவெவ வீதியைச் சேர்ந்த 59 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நேற்று சனிக்கிழமை (18) வயலில் வேலை செய்துக்கொண்டிருந்த நிலையில் இந்த மரணம் ஏற்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனைக்குப் பின்னர், சடலம் குருநாகல் வைத்தியசாலையின் பிரேத அறையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

பொல்பிதிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்