வெலிவேரிய மற்றும் கொழும்பு 12 ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனைகளின் போது, ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் இரு பெண்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெலிவேரிய, எம்பரலுவ வடக்கு பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சோதனையின் போது 25 கிராம் ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் வெலிவேரிய பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட பெண்ணிடம் முன்னெடுக்கப்பட்ட விரிவான விசாரணைகளை அடுத்து, மற்றுமொரு பெண் கைது செய்யப்பட்டார்.
கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய பெண்ணிடமிருந்து 25 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் வியாபாரத்தின் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 410,470 ரூபா பணத்தொகை என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், வெலிவேரிய பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




