மக்களிடம் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டும் – சஜித்

எமது நாட்டை ஒரு சிண்டாக அறிமுகப்படுத்தியமை தொடர்பில் நாட்டிடமும் மக்களிடமும் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டியது மிகவும் முக்கியமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  புதன்கிழமை (4) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு  தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது நாட்டை ஒரு சிண்டாக அறிமுகப்படுத்தி மோசமான முறையில் சித்தரிப்பது பொருத்தமில்லை. அதனால் இதுதொடர்பில் மக்களிடம் மன்னிப்பு கோருவது மிகவும் பொருத்தமாகும். அதனால் சபையில் பிரதமர் இருக்கும் நிலையில் இதனை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்துக்கு வருகை தந்து,  மத்திய கிழக்கி தற்போது ஏற்பட்டுள்ள ளுத்த நிலைமை காரணமாக எமது நாடு அதற்கு எவ்வாறு முகம்கொடுப்பது என்பது தொடர்பில் பாராளுமன்றத்துக்கு தெளிவுபடுத்தி இருந்தார்.

இதன்போது அவர், கடந்த காலங்களில் நாட்டை ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் நாட்டை தூரநோக்குடன் அபிவிருத்தி செய்யாமல் செயற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி, இது நாடு அல்ல. ஒரு சிண்டாகும்  என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.