மட்டக்களப்பு நகரில் நீதிமன்றத்திற்கு அருகாமையிலுள்ள சட்டத்தரணி ஒருவரின் காரியாலயத்தினுள் அத்துமீறி நுழைந்து பெண் சட்டத்தரணியையும் அவரது கணவரையும் தாக்கிய சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் உட்பட இருவரையும் விளக்கமறியலில் வைக்கெமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் எம்.எச். முகமட் ஹம்ஸா செவ்வாய்க்கிழமை (6) உத்தரவிட்டார்.
இதனையடுத்து தாக்குதலுக்கு உள்ளான சட்டத்தரணியும் அவரது கணவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்நிலையிலையில் கைது செய்யப்பட்ட இருவரையும் செவ்வாய்க்கிழமை (6) மாலை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எச். முகமட் ஹம்சா முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.