மஸ்கெலியா நகரில் மதுபான விற்பனைசாலை உடைக்கப்பட்டு திருட்டு!

மஸ்கெலியா நகரின் பிரதான வீதியில் அமைந்துள்ள  மதுபான விற்பனைசாலை  ஒன்று நேற்றுக் (24) காலை உடைக்கப்பட்டு  சுமார் 130,000 ரூபா பணமும்  மதுபான போத்தல்களும் திருடப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் மதுபானசாலை முகாமையாளர் மஸ்கெலியா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து நகரில் காணப்பட்ட சிசிரிவி கமெராக்களை ஆய்வு செய்தபோது, நேற்று அதிகாலை  3.30 மணியளவில் குளிர் அங்கியுடன் காணப்பட்ட ஒருவர் முகமூடியுடன் அணிந்திருந்த நிலையில் மதுபானசாலையின் பூட்டை உடைத்துச் சென்றது அவதானிக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் மஸ்கெலியா நகரில் உள்ள தபால் நிலைய வீதி ஊடாக பயணித்தமையும் கண்டறியப்பட்டுள்ளது.