மஹர சிறைச்சாலையில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டு, பதுளை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 10 கைதிகளின் பாதுகாப்புக்காக விசேட பாதுகாப்புத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த கைதிகள் பதுளை சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டதை அடுத்து, அங்கு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதற்கமைய, பொலிஸ் விசேட அதிரடிப்படையின் நேரடி மேற்பார்வையின் கீழ் இந்த விசேட பாதுகாப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிய முடிகிறது.
மேலும், சிறைச்சாலை வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் 24 மணி நேரமும் தொடர்ச்சியான தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.




