மாண்புமிகு மலையக மக்கள் கூட்டிணைவு ஏற்பாடு செய்துள்ள தலைமன்னார் முதல் மாத்தளை வரையிலான மலையக எழுச்சி நடை பயணத்திற்கு ஆதரவாக மட்டக்களப்பிலும் ஆதரவுப் பேரணி இடம்பெறுகின்றது.
மலையக மக்கள் எதிர் நோக்கி உள்ள பிரச்சினைகள் தொடர்பாக கிழக்கு மாகாண மக்களிடையே விழிப்புணர்வையும் தெளிவினையும் ஏற்படுத்தக் கூடிய வகையில் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைச் சார்ந்த சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மலையக மக்களின் உரிமை சார்ந்த விடயங்களில் ஆர்வம் உள்ள தனி நபர்கள் சர்வ மத தலைவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து ஓர் கவன ஈர்ப்பு நடை பயணத்தை மட்டக்களப்பில் மேற்கொண்டுள்ளனர்.
மாண்புமிகு மலையக மக்கள் கூட்டிணைவின் 11 அம்ச கோரிக்கைகளுக்கு வலு சேர்ப்பதாக இந்த நடை பயணம் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.