மாண்பு மிகு மலையகம் 200 நடை பயணம் கெக்கிராவையை சென்றடைந்தது!

மாண்புமிகு மலையக மக்கள் கூட்டிணைவு ஏற்பாடு செய்துள்ள தலைமன்னார் முதல் மாத்தளை  வரையிலான நடை பயணத்தின் இன்றைய பயணம் கெக்கிரவையை சென்றடைந்துள்ளது.

 

இன்று திறப்பனை முதல் கெக்கிராவ வரை நடைப் பயணம் இடம்பெற்றது.

சகோதர சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களின் அமோக வரவேற்புடன்இந்தப் பயணம் அமைந்தது.

கத்தோலிக்க குருமார்களும் ஆயரும் இணைந்து நடைபயணத்தை வரவேற்றனர்.

கெக்கிராவ  பிரதேச செயலகத்தில் வரவேற்பு நிகழ்வும் இடம்பெற்றது.

பள்ளி வாசலில் மலையகம் 200 தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

கெக்கிராவ கலாசார நிலைய விரிவுரை மண்டபத்தில்  சிரேஷ்ட பாடகர் ஜயதிலக்க பண்டாரவினால் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.