மாத்தளை சர்வதேச விமான நிலையம் கையகப்படுத்த இந்தியா – சீனா தீவிரம்

மாத்தளை சர்வதேச விமான நிலையத்தை கையகப்படுத்திக் கொள்வதற்கான போட்டியில் பல நாடுகள் இறங்கியுள்ளதாக தனியார் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன், ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தையும் மாத்தளை விமான நிலையத்தையும் சீனக் கடன் பொறிகளில் ஒன்றாக தொடர்ந்து குறிப்பிட்டு வருகின்றன.

இந்த நிலைமைக்கு பதிலளிக்கும் விதமாக, கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் அப்போதைய மைத்திரி – ரணில் அரசாங்கம் 2017ஆம் ஆண்டில் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை சீனாவுக்குக் குத்தகைக்கு விட நடவடிக்கை எடுத்துள்ளன. ஆனாலும் அதனை இந்தியா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இருப்பினும், அண்டை நாட்டின் எதிர்ப்பையும் மீறி, மைத்திரி-ரணில் அரசாங்கம் தனது முடிவை நடைமுறைப்படுத்தி 99 வருடக் குத்தகைக்கு அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை சீனாவிடம் கையளித்துள்ளது.

ரணில் – மைத்திரி அரசாங்கம்

இதனைத் தொடர்ந்து, 2024ஆம் ஆண்டு உலகின் மிகவும் கைவிடப்பட்ட விமான நிலையம் என்று கேலிக்கு உள்ளான மாத்தளை விமான நிலையத்தை, ஒரு இந்திய – ரஷ்ய கூட்டு நிறுவனத்திற்குக் குத்தகைக்கு விட ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் முடிவு செய்தது.

 

இருப்பினும், மாத்தளை விமான நிலையத்தைக் குத்தகைக்கு விட முன்வந்த ரஷ்ய நிறுவனம் ஏற்கனவே அமெரிக்காவால் தடை செய்யப்பட்டிருந்ததால், அந்த முடிவுக்கு அமெரிக்கா அதிருப்தி தெரிவித்தது. இதன்படி, 2024ஆம் ஆட்சிக்கு வந்த அநுர குமார திசாநாயக்க அரசாங்கம், சம்பந்தப்பட்ட ஒப்பந்தத்தைச் செயல்படுத்தாமல் இருக்க நடவடிக்கை எடுத்தது.

அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்பின் சுங்கவரிக் கொள்கைகள் தொடர்பாக இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையே சமீபத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது, ​​மாத்தளை விமான நிலையத்தில் அமெரிக்காவிற்கு ஆர்வம் இருப்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிப்பு

அதன் பின்னர், மாத்தளை விமான நிலையத்தின் நிர்வாகத்திற்காக வெளிநாட்டு முதலீடுகளை அழைக்க தற்போதைய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. தற்போது இந்தியாவும் சீனாவும் கூட இதில் தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளன. மேலும், மத்திய கிழக்கு நிறுவனங்களும் இந்தத் திட்டத்தில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளன.

சமீபத்தில் இலங்கைக்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதர், வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்கவை சந்தித்து, கொழும்பு துறைமுகம் மற்றும் இலங்கை விமானப் போக்குவரத்துத் துறையில் தனது நாடு முதலீடுகளை மேற்கொள்வதற்கான ஆர்வத்தை வெளிப்படுத்தினார்.

மாத்தளை சர்வதேச விமான நிலையம் கையகப்படுத்த இந்தியா - சீனா தீவிரம் - அநுரவின் முடிவு இதுவே..! | Matale International Airport Acquisition

 

மேலும், துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலகவும் மாத்தளை விமான நிலையத்தில் மத்திய கிழக்கு நிறுவனங்களின் ஆர்வம் குறித்து கருத்தொன்றை சமீபத்தில் வெளிப்படுத்தியிருந்தார்.

அந்த வகையில், மாத்தளை விமான நிலையத்தைக் கையகப்படுத்திக் கொள்வதற்கான போட்டி தற்போது பல்முனைப் போட்டியாக உருவெடுத்துள்ளது. எனினும், மாத்தளை விமான நிலையத்தில் இந்தியாவும் சீனாவும் ஒரே நேரத்தில் ஆர்வம் காட்டுவதால் புவிசார் அரசியல் போராட்டமொன்று உருவாகக்கூடிய வாய்ப்புள்ளது.

விமான நிலைய கைப்பற்றலில் இந்தியா – சீனா

இது சீனாவால் கட்டப்பட்ட விமான நிலையம் என்பதால், சீனாவே கட்டிய அருகிலுள்ள அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை சீனாவிற்கு குத்தகைக்கு விடுவதையும் இந்தியா கடந்த காலத்தில் எதிர்த்துள்ளது.

அம்பாந்தோட்டையில் ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்காக சீனா அரசாங்கத்துடன் ஒரு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ள போதும், அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

மேலும், அம்பாந்தோட்டைத் துறைமுகமும் விமான நிலையமும் சீனாவின் கட்டுப்பாட்டில் இருப்பதை இந்தியா விருப்பம் தெரிவிக்காது.

மாத்தளை சர்வதேச விமான நிலையம் கையகப்படுத்த இந்தியா - சீனா தீவிரம் - அநுரவின் முடிவு இதுவே..! | Matale International Airport Acquisition

இதேவேளை, சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு துறைமுகத்திற்கு அருகிலுள்ள விமான நிலையத்தை இந்தியா தன் கட்டுப்பாட்டில் எடுப்பதை சீனா பொறுத்துக்கொள்ளும் என்று நம்புவது கடினம்.

இந்த சிக்கலான சூழலில், விமான நிலையத்தின் நிர்வாகத்தை ஒரு மத்திய கிழக்கு நிறுவனத்திடம் ஒப்படைப்பதன் மூலம், அதன் கட்டுப்பாடு தொடர்பாக சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே ஏற்படக்கூடிய புவிசார் அரசியல் மோதலைத் தவிர்க்க அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்ளக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.