மாத்தளை பகுதியில் காட்டு யானை தொல்லை

மாத்தளை, யட்டவத்தைப் பிரதேசத்தில் புதிதாக காட்டு யானைகளின் தொல்லை ஏற்பட்டுள்ளதாகப் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

மாத்தளை பிரதேச யட்டவத்தை, கம்மல்ல, திவில்ல ஆகிய இடங்களில் இவ்வாறு காட்டு யாகைன் நடமாடுவதாகவும் இதனால் தென்னை, வாழை போன்ற பயிர்களுக்கு காட்டு யானைகள் சேதம் ஏற்படுத்துவதாகத் தெரிவித்துள்ளனர்.

இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு,கடந்த இரண்டு வாரங்களாக காட்டு யானைகள் தமது கிராமங்களுக்குள் வந்து விவசாயப் பயிர்களை அழித்து வந்துள்ளது.

சேனைப் பயிர் செய்கைகளை மேற்கொள்பவர்களது கொட்டில்கள் மற்றும் சேனைப் பயிர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.