மாமனிதர் தராகி சிவராம் கொலை குற்றச்சாட்டிற்குள்ளாகியிருந்தவரும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் பிரதித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான ஆர்.ஆர் என அழைக்கப்படும் வேலாயுதம் நல்லநாதர் (இராகவன்) இன்று மாலை சாவடைந்தாக அறிவிக்கப்பட்டள்ளது.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மற்றொரு தலைவரான கிசோர் மரண செய்தியை பெரும் துயரத்தோடு அறியத்தருவதாக தெரிவித்துள்ளார்.
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரின் பணிப்பின் பேரில் இலங்கை புலனாய்வு துறை முகவர்களான தமிழீழ மக்கள் விடுதலைக் கழக கூலிப்படை சகிதம் கொலையை முன்னெடுத்திருந்தனர்.
அவ்வகையில் மாமனிதர் தராகி சிவராமினை கடத்தி சென்று பீற்றர் எனும் சக கொலையாளி சகிதம் கொலையை அரங்கேற்றியதாக ஆர்.ஆர் என அழைக்கப்படும் வேலாயுதம் நல்லநாதர் (இராகவன்) மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
கைதான இருவரும் பின்னர் புலனாய்வு பிரிவின் கோரிக்கையின் பேரில் விடுவிக்கப்பட்ட நிலையில் இராகவன் தராகி சிவராமினால் கட்டமைக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொது செயலாளராகியிருந்தார். எனினும் அவர் எதனையும் அறிந்திராத மகான் என விசுவாசிகள் வாதிட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.