ஊடகங்களில் பேசப்பட்டு வந்தது போல மின் கட்டணத்தில் எதுவித திருத்தமும் மேற்கொள்ளப்படாது என மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அரச கொள்கையின் பிரகாரம் வருடத்திற்கு இருமுறை என ஜனவரி மாதம் மற்றும் ஜூலையில் மாத்திரமே மின் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ள முடியுமென ‘எக்ஸ்’ (ட்விட்டர்) ல் தகவலைப் பகிர்ந்த போது அமைச்சர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் இலங்கை மின்சார சபையானது இவ்வருடம் முழுவதும் தடையற்ற மின்சார விநியோகத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.