அநுராதபுரம் – மருதங்கடவலை, ஹினுக்கிரியாவ குளத்தில் குளிக்கச் சென்ற சிறுமியொருவர் நேற்று வியாழக்கிழமை (19) நண்பகல் முதலையினால் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளதாக மரதன்கடவல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த 09 வயதுடைய சிறுமி கனேவல்பொல பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
சிறுமி தனது பாட்டியுடன் குளத்தில் குளித்துக்கொண்டிருந்த போதே இந்த சம்பவம் நேர்ந்துள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கிராமவாசிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இணைந்து குளத்தில் தேடுதல் நடத்திய போது, முதலை அச்சிறுமியை விட்டுவிட்டுச் சென்றுள்ளது.
மீட்கப்பட்ட சிறுமி உடனடியாக மருதங்கடவலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.





