முல்லைத்தீவு வலயக்கல்விப் பணிப்பாளர் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் எடுத்துள்ள நடவடிக்கை!

முல்லைத்தீவு வலயக்கல்விப் பணிப்பாளர் இ. தமிழ்மாறன் மீது முன்வைக்கப்பட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராயுமாறு மத்திய கல்வி அமைச்சுக்கு சட்டமா அதிபர் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பி வைத்த முறைப்பாட்டில் முல்லைத்தீவு வலயக்கல்விப் பணிப்பாளர் தமிழ்மாறன் புலமை பரிசில் பரீட்சைக்கு மாணவனை அனுமதிக்காமை, ஆசிரியர்களின் சம்பளத்தை தடுத்து வைத்தல், முறையற்ற இடமாற்றங்கள் மற்றும் இலங்கையில் நல்லிணக்கத்துக்கு பங்கமாக சிங்களப் பிரதேச பாடசாலைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை மாகாண கல்வித் திணைக்களத்திற்கு திருப்பி அனுப்பியமை, இரத்மலானை அரசினர் விடுதியில் மேற்கொள்ளப்பட்ட வேண்டத்தகா செயற்பாடுகள் தொடர்பில் பல முறைகேடுகள் தொடர்பாக வடக்கு மாகாண உயர் மட்ட அதிகாரிகளின் நடவடிக்கை போதாமல் இருந்தால் அது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு கோரி சட்டமா அதிபர் திணை களத்துக்கு முறைப்பாட்டாளரால் எழுத்து மூலம் கடிதம் அனுப்பப்பட்டது.

இவ்வாறான நிலையில் சட்டமா அதிபர் திணை களம் குறித்த வலையக் கல்வி பணிப்பாளர் தொடர்பான நடவடிக்கைகளை ஆராயுமாறு மத்திய கல்வி அமைச்சுக்கு எழுத்து மூலம் கோரிக்கை அனுப்பி உள்ளது.