மூத்த பத்திரிகையாளர் தனபாலசிங்கத்தின் தந்தை காலமானார்

மூத்த பத்திரிகையாளரும் தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியருமான தனபாலசிங்கத்தின் தந்தையார் ஓய்வுபெற்ற தபால் திணைக்கள அலுவலர் ஆழ்வார் வீரகத்தி தனது 91ஆவது வயதில் காலமானார்.

சிறிதுகாலம் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், அவர் இன்று வெள்ளிக்கிழமை (7) காலமானதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் திங்கட்கிழமை (10) காலை 10 மணியளவில் அவரின் சொந்த ஊரான வடமராட்சி கரவெட்டியில் நடைபெறவுள்ளது.