மூன்று விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன!

அடர்த்தியான மூடுபனியினால் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க வந்த மூன்று ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.

அதன்படி, சீனாவின் குவாங்சோவிலிருந்து வந்த என்கின்ற இரண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் UL-881  விமானங்கள் மற்றும் சவுதி அரேபியாவின் ரியாத்திலிருந்து வந்த UL-266 என்கின்ற விமானமும் மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டன.

மேலதிகமாக சவுதி அரேபியாவின் தம்மத்திலிருந்து வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் UL-254 விமானம் இந்தியாவின் கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டன.

அதிகாலையில்  நிலவிய அடர்த்தியான மூடுபனி தற்போது தணிந்துள்ளது. இதனால் விமானங்கள் எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க முடிந்தது என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும், மூடுபனி தணிந்து தெளிவானதும் வழக்கமான செயல்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதாகவும் விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.