சீன அரசாங்கத்தின் 240 மில்லியன் யுவான் நன்கொடையின் கீழ் புதுக்கடை மேல் நீதிமன்ற கட்டத்தொகுதியில் மறுசீரமைப்பு நடவடிக்கை எதிர்வரும் 31ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்க இருக்கிறது.
அன்றைய தினம் காலை 10மணிக்கு மறுசீரமைப்பு நடவடிக்கை ஆரம்பிக்கும் நிகழ்வு பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ் மற்றும் இலங்கைக்கான சீன தூதுவர் கீ ஸென்ஹொங் ஆகியோரின் பங்குபற்றலுடன் இடம்பெறும்.
இலங்கை மற்றும் மக்கள் சீனா குடியரசு அரசாங்கங்களுக்கிடையில் இடம்பெறும் ராஜதந்திர தொட்ரபுகளை மேலும் பலப்படுத்திக்கொண்டு இற்றைக்கு 30வருடங்களுக்கு முன்னர் அதாவது, 1988ஆம் ஆண்டுக்கு முன்னர் சீன அரசாங்கத்தினால் மேல்நீதிமன்ற கட்டட தொகுதியை நிர்மாணித்து இலங்கை அரசாங்கத்துக்கு நன்கொடையாக ஒப்படைத்திருக்கிறது.
இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சீனா குடியரசுடன் இணைந்து 2016இல் கைச்சாத்திப்பட்ட ஒப்பந்தத்துக்கமைய மேலநீதிமன்ற கட்டட தொகுதியை விரிவாக மறுசீரமைப்பதற்கு இணங்கி இருக்கிறது. இந்த மறுசீரமைப்பு நடவடிக்கை இரண்டு கட்டங்களின் கீழ் 32மாதங்களுக்குள் மேற்கொள்ள இருப்பதுடன் முதலாவது கட்டத்தின் கீழ் மேன்முறையீட்டு நீதிமன்றம் அமைந்திருக்கும் பகுதி மற்றும் இரண்டாம் கட்டத்தின் கீழ் உயர் நீதிமன்றம் அமைந்திருக்கும் பகுதி மறுசீரமைக்க இருக்கிறது.
அதன் பிரகாரம் 2025 ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி அனைத்து மறுசீரமைப்பு நடவடிக்கைகளும் நிறைவடைய இருக்கிறது.
மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு ஏற்புடையதாக மக்கள் சீன குடியரசின் வனிக அமைச்சு, எமது நாட்டு நீதி அமைச்சு மற்றும் சீன சர்வதேச பொருளாதார ஒத்துழைப்பு நிறுவனம் ஆகியவற்றுக்கிடையில் ஒப்பந்தம் ஒன்று 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது.