மொரகஹஹேனவில் தனியார் வங்கியில் பாரிய தீ பரவல்

மொரகஹஹேன நகரத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் பாரிய தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக மொரகஹஹேன பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தீ பரவல் இன்று (11) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.

ஹொரணை மாநகர சபையின் தீயணைப்புப் படையினர் இந்த தீ பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.