பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம் மற்றும் ஏனைய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் இன்று வியாழக்கிழமை (12.09.2024) யாழ்.மாவட்டச் செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் மாவட்டப் பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நடைபெற்றது.
யாழ்.மாவட்டத்தில் பிரதேச செயலக மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாக இதன்போது ஆராயப்பட்டன.
இக் கலந்துரையாடலில் மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளர், பிரதம கணக்காளர், பிரதேச செயலாளர்கள், மாவட்ட, பிரதேச செயலக பிரதி, உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள் மற்றும் மாவட்டச் செயலகத் துறைசாா் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.