யாழில் மது போதையில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். கோப்பாய் பகுதியை சேர்ந்த (வயது 34) நபரே இவ்வாறு உயிர் மாய்த்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
இவர் கடந்த சில நாட்களாக மன விரக்தியில் இருந்துள்ளார். இந்நிலையில் 18ஆம் திகதி வியாழக்கிழமை இரவு மது போதையில் காணப்பட்டுள்ளார். அந்தவகையில் வெள்ளிக்கிழமை (19) காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.





