யாழில் வர்த்தக நிலையத்தை அடித்து நொறுக்கிய கும்பல்!

யாழ்ப்பாணம், கல்வியங்காட்டு பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றினுள் வன்முறை கும்பல் புகுந்து தாக்குதல் நடத்தியதில் வர்த்தக நிலைய உரிமையாளர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் நேற்று புதன்கிழமை (02) இடம்பெற்றுள்ளது.

நேற்றிரவு மூவர் அடங்கிய வன்முறை கும்பலொன்று குறித்த கடைக்குள் புகுந்து கண்ணாடி அலுமாரி, சோடா போத்தல்கள் என்பவற்றை அடித்து நொறுக்கி, கடை உரிமையாளரையும் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

இந்நிலையில், உரிமையாளருக்கும் அவரது சகோதரருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.