யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவன் பகுதியில் பாரிய வாள்வெட்டுத் தாக்குதல் முயற்சியொன்றை சுன்னாகம் பொலிஸார் முறியடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று (16) பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையின்போது, வன்முறை கும்பலைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புன்னாலைக்கட்டுவன் பகுதியில் குறிப்பிட்ட ஒரு இலக்கை நோக்கி தாக்குதல் நடத்த இந்த வன்முறை கும்பல் தயாராகிக்கொண்டிருப்பதாக சுன்னாகம் பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சந்தேக நபர்களை சுற்றிவளைத்தனர்.
இதன்போது தாக்குதலுக்கு பயன்படுத்தப்படவிருந்த 3 வாள்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்ட மூவரிடமும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.





