யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில் கைக்குண்டொன்று இன்றைய தினம் வியாழக்கிழமை (03) மீட்கப்பட்டுள்ளது.
அரியாலை, பூம்புகார் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்தே இந்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் யாழ்ப்பாண பொலிஸார், இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.