யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி அகழ்வு: 224 உடல்கள் மீட்பு.!

இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை முன்னெடுப்பதை அரசு கடுமையாக எதிர்க்கிறது என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற அமர்வின் போது, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெளிவுபடுத்தினார்.

காணாமல் போனவர்களின் எண்ணிக்கை குறித்து அமைச்சர் விளக்கமளிக்கையில், 2009ஆம் ஆண்டு போரின் இறுதிக்கட்டத்தில் சுமார் 2,764 பேர் காணாமல் போயுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன என்றாலும், அந்த எண்ணிக்கை விவாதத்துக்குரியது என்றும் துல்லியமான தகவல்கள் அரசிடம் இல்லை என்றும் குறிப்பிட்டார்.மேலும், போர்க் காலப்பகுதியில் இரு தரப்பினரும் இத்தகைய காணாமலாக்கல் சம்பவங்களில் ஈடுபட்டதாக கூறிய அவர், அரசு ஒருபோதும் இத்தகைய செயல்களை ஆதரிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.இந்த விவகாரத்தில் எந்தவொரு சர்வதேச அமைப்போ அல்லது வெளித்தரப்போ விசாரணை நடத்த அனுமதி வழங்கப்படாது என்றும், உள்நாட்டு முறைகளின் மூலம் மட்டுமே தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த இரா. சாணக்கியன் எம்.பி., அரசின் நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்தார். காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் நீதி வழங்குவதிலும் பொறுப்புக்கூறலிலும் அரசாங்கத்திடம் தெளிவான கொள்கை இல்லை என்றும், அமைச்சரின் தரவுகள் முரண்பாடுகளைக் கொண்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.