ரத்மலானாவில் உள்ள கடைத்தொகுதியொன்றில் வெள்ளிக்கிழமை (17) தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளது.
குறித்த தீ விபத்தில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க மூன்று தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
இதுவரை யாருக்கும் காயம் ஏற்படவில்லை, மேலும் தீயை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சிகளில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.