முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (08) காலை உத்தரவிட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ராஜித சேனாரத்ன இன்றைய தினம் சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ராஜித சேனாரத்னவை 20 ஆயிரம் ரூபா பெறுமதியான ரொகெ்க பிணை மற்றும் 02 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆகஸ்ட் 29 ஆம் திகதி காலை ஆஜர்ப்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





