ரி-56 ரக துப்பாக்கி, வெடிமருந்துகளுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டமை ! -நிதிக் குற்றப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை

ரி -56 ரக துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டமை தொடர்பில், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.

ஹுங்கம பகுதியில், துப்பாக்கி மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 38 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு, கடந்த 17ஆம் திகதி கைது செய்துள்ளது.

அவரிடம் இருந்து ரி-56 ரக துப்பாக்கி, 63 தோட்டாக்கள், 2 தோட்டாக்கள் மற்றும் 12 போர் தோட்டாக்களை சுடக்கூடிய 2 துப்பாக்கிகள், 12 போர் தோட்டாக்களின் 25 தோட்டாக்கள், 34 தோட்டாக்கள் ரிவோல்வர் ரக தோட்டாக்கள், ஒரு டிப்பர் மற்றும் கெப் ரக வாகனம் என்பன பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில், டிப்பர் மற்றும் கெப் ரக வாகனத்தை, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் வழங்கியதாகவும், அவர் தற்போது தடுப்புக்காவலில் உள்ளதாகவும், சந்தேக நபருக்கு 10 இலட்சம் ரூபாய் தொகை வழங்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரை தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை, நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு மேற்கொண்டு வருகிறது.

சமீபத்திய செய்திகள்