லிட்ரோ கேஸ் விலை குறைக்கப்படுமா?

லிட்ரோ எரிவாயு லங்கா நிறுவனம் திறைசேரிக்கு 1.5 பில்லியன் ரூபாவை வழங்கவுள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

குறித்த தொகையை தமது தாய் நிறுவனமான இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் ஊடாக இன்று (20) திறைசேரிக்கு வழங்க நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.

மேலும், நாங்கள் அதிகளவில் விலைக் குறைப்புகளைச் செய்துள்ளோம். இந்த விலைகளை ஒரே விலை வரம்பிற்குள் தொடர்ந்து வைத்திருக்க எதிர்ப்பார்த்துள்ளோம். அதற்கு நாங்கள் பல முறைகளைப் பயன்படுத்துகிறோம்.

நானும் எனது குழுவும் விலை மாற்றம் தொடர்பில் விசேட கவனம் செலுத்துகிறோம்.  குறிப்பாக, விலை சூத்திரத்தின்படி பெறப்படும் விலைகளுக்கு அமைய, உலகச் சந்தையின் விலை ஏற்ற இறக்கம் குறித்து தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம்.

வருங்காலங்களில் சிலிண்டர்களின் விலையை இந்த விலை வரம்பிற்குள் வைத்திருப்பதே எமது நோக்கம் என்றார்.