வடமராட்சியில் இலவச மருத்துவ முகாம்

யாழ் மருத்துவச் சங்கமும், யாழ் மருத்துவப் பிரதிநிதி சங்கமும், யாழ்.வடமராட்சி இந்து மகளிர் கல்லூரிச் சமூகமும் இணைந்து நடாத்திய மூன்றாவது இலவச மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை (03 .04.2026) காலை-09 மணி முதல் நண்பகல்- 12 மணி வரை யாழ்.வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.
இந்த மருத்துவ முகாம் நிகழ்வில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.