யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (12.04.2026) இடம்பெற்ற கோர விபத்தில் ஏழு பேர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.
அம்பன் பகுதியில் நாகர்கோவில் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த ஹயஸ் ரக வான் பிறிதொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட போது மதகொன்றுடன் மோதி மதகு பாதுகாப்புக் கற்களை உடைத்துக் கொண்டு மின்சாரக் கம்பம் மீது மோதி வயல் நோக்கிப் பாய்ந்து விபத்துக்குள்ளாகியது.
சம்பவத்தில் ஹயஸ் ரக வானில் பயணித்த ஏழு பேரும் காயம் எதுவும் ஏற்படாமல் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர். விபத்துத் தொடர்பில் மருதங்கேணிப் பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டுள்ளனர்.






