வல்வெட்டித்துறையில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகத்திற்கு 21ஆயிரம் ரூபாய் தண்டம்

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த உணவகம் ஒன்றிற்கு 21 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை பொது சுகாதார பரிசோதகரினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனையின் போது சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த உணவகம் ஒன்றிக்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் 07 குற்றச்சாட்டுக்களை முன் வைத்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கு இன்றைய தினம் வியாழக்கிழமை (22) விசாரணைக்காக எடுத்து கொள்ளப்பட்ட போது , உரிமையாளர் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, மன்று 21 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது.