வழக்கு ஒன்றின் பிரதியை போலி கையொப்பமிட்ட அலுவலக உதவியாளர் ஒருவர் கைது

கண்டி நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கு ஒன்றின் பிரதியைப் போலி கையொப்பமிட்டு, நபர் ஒருவருக்கு வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றத்தினால் கடமையாற்றும் அலுவலக உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, விசாரணைகளை மேற்கொண்ட கண்டி பொலிஸ் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர், சந்தேகநபர் நீதிமன்றப் பதிவாளரின் கையொப்பத்தைப் போலியாக இட்டு, அது தொடர்பான ஆவணத்தை தயாரித்துள்ளதைக் கண்டு பிடித்துள்ளனர்.

சந்தேக நபருக்கு எதிராக நீதிமன்றில் செவ்வாய்க்கிழமை (23) அல்லது புதன்கிழமை (24)  வழக்குத் தாக்கல் செய்ய கண்டி பொலிஸ் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கண்டி பிரதேசத்திற்கு பொறுப்பான பதில்  சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி அனுருத்த பண்டாரநாயக்க தலைமையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.