வவுனியாவில் புகையிரத விபத்து : லொறி சாரதி உட்பட இருவர் படுகாயம்

வவுனியா – திருநாவற்குளம் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) இடம்பெற்ற புகையிரத விபத்தில் லொறி சாரதி உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கடுகதி புகையிரதம்,  வவுனியா – திருநாவற்குளம் 3ஆம் ஒழுங்கை பகுதியில் வைத்து, புகையிரத கடவையை கடக்க முயன்ற லொறி மீது மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் லொறியில் பயணித்த சாரதியும் மற்றொருவரும் படுகாயமடைந்துள்ளனர்.

அதனையடுத்து, காயமடைந்த இருவரையும் பொதுமக்கள் மீட்டு, வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இவ்விபத்தில் தாண்டிக்குளம் பகுதியை சேர்ந்த இருவரே காயமடைந்துள்ளனர் என பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்