வவுனியா தோணிக்கல்லில் வீட்டுக்கு தீ வைத்து வாளால் வெட்டிய சம்பவத்தில் இருவர் மரணமடைந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட ஐவரை கைது செய்த பொலிஸார் நீதிமன்ற உத்தரவினை பெற்று நடத்திய விசாரணையின் பின்னர் கூமாங்குளத்தை சேர்ந்தவரும் சம்பவத்தில் மரணமடைந்த சுகந்தனின் நண்பராக இருந்து, பெண் விவகாரத்தால் பின்னர் பிரிந்தவருமான நண்பரே இன்று (03) கைது செய்யப்பட்டுள்ளார்.