வவுனியா – ஈரப்பெரியகுளம் தும்புத் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து

வவுனியா, ஈரப்பெரியகுளம் தும்புத் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு தொழிற்சாலையின் ஒரு பகுதி தீயில்  எரிந்து நாசமாகியுள்ளது.

 

வெள்ளிக்கிழமை (21) மாலை 5.45 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, ஈரப்பெரியகுளம் பகுதியில் அமைந்துள்ள தும்புத் தொழிற்சாலையின் ஒரு பகுதியில் திடீரென தீ பரம்பல் ஏற்பட்டதை அவதானித்த அங்கு கடமையில் இருந்தவர்கள் உடனடியாக பொலிஸாருக்கும், வவுனியா மாநகரசபை தீயணைப்பு பிரிவினருக்கும் தகவல் வழங்கினர்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா மாநகரசபை தீயணைப்பு பிரிவினர் இராணுவத்தினரின் துணையுடன் தீயை கட்டுப்படுத்த கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

எனினும் தும்புத் தொழிற்சாலையின் இரு பகுதியில் தீப்பரம்பல் ஏற்பட்டுள்ளது. கட்டுப்படுத்த கடும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தீ விபத்துக்கான காரணம் குறித்து ஈரப்பெரியகுளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.