விக்னேஸ்வரனிடம் ரணில் சொன்ன சங்கதி என்ன?

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து அக்கிராசன உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனதுரையை 11.15 மணியளவில் நிறைவு செய்தார்.

தனதுரையை நிறைவு செய்து கொண்டதன் பின்னர், சபா பீடம் வழியாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியேறிய போது,ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுந்து நின்றனர்.

அனைவரையும் பார்த்து தலையை அசைத்து தனது நன்றியை தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எழுந்து நின்றுக்கொண்டிருந்த தமிழ் மக்கள் தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரான முன்னாள் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரனின் அருகில் சென்று ஒருசில வினாடிகள் ஏதோ கூறிவிட்டுச் சென்றார்.