வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன, இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் வினய் குவாத்ராவைச் சந்தித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 21 ஆம் திகதி புதுடெல்லிக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், அதற்கான நிகழ்ச்சிநிரல் ஏற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, இந்திய வெளிவிவகார செயலாளர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.