விபத்தில் உடல் நசுங்கி பலியான இளைஞர்கள்

கொழும்பு – கண்டி பிரதான வீதியில், பட்டலிய சந்திக்கு அருகில் சம்பவித்த கோர விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் ரதாவடுன்ன பகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்களே உயிரிழந்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கொழும்பில் இருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்ற தனியார் பயணிகள் பேருந்தை முந்திச் செல்ல மோட்டார் சைக்கிள் முற்பட்டபோது இந்த விபத்து சம்பவித்துள்ளது.

மோட்டார் சைக்கிள் முதலில் பேருந்தின் மீது மோதியதாகவும், பின்னர் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த லொறி ஒன்றின் மீது மோதி அதன் அடியில் சிக்கியதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

பேருந்து மற்றும் லொறி ஆகிய இரண்டு வாகனங்களிலும் மோட்டார் சைக்கிள் மோதியமையினால் கோர விபத்து நிகழ்ந்திருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த இளைஞர்களை அப்பகுதி மக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

எனினும் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.