வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் மத்துகமவில் ஒருவர் கைது!

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் மத்துகம – ஹொரஹேன பிரதேசத்தில் ஒருவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அளுத்கம முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 12 போர் துப்பாக்கி மற்றும் அதே ரகத்தை சேர்ந்த இரண்டு தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பதுகம பிரதேசத்தை சேர்ந்த 62 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மத்துகம நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.