வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் இளைஞன் ஒருவர் காயங்களுடன் மயங்கிய நிலையில் இன்று (8) காலை மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞனின் தலையில் காயம் காணப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
குறித்த இளைஞனை மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.