வேலன் சுவாமி வைத்தியசாலையில் அனுமதி

தையிட்டி புத்த விகாரைக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டு அங்கு ஏற்பட்ட கலவரத்தில் நல்லூர் சிவகுரு ஆதீனத்தின் முதல்வர் தவத்திரு வேலன் சுவாமி அவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு் தள்ளி விழுத்தி இழுத்து தூக்கி வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டார்.

தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அத்துடன், வலி.கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் உட்பட வலி.வடக்கு பிரதேச சபை கௌரவ உறுப்பினர்கள் நால்வர் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சமூக ஆர்வலர்கள் பலரும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.