பகுதிநேர வேலை வாய்ப்புக்களை பெற்றுத் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட பெண்ணை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ் போதரகம நேற்று வியாழக்கிழமை (18) உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, குறித்த பெண்ணை 20 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த பெண் பகுதிநேர வேலை வாய்ப்புக்களை பெற்றுத் தருவதாக கூறி பல்வேறு நபர்களிடமிருந்து பணம் பெற்று சுமார் 17 இலட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.



