யானைகளை கொன்று பெறப்பட்ட அரியவகை கஜமுத்துக்கள் 03 வைத்திருந்த சீதுவை பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் வெள்ளிக்கிழமை (14) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி, அம்பாறை பொலிஸ் பிரிவில் உள்ள பஸ் நிலையத்திற்கு அருகில் சோதனை நடத்திய போது சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இளைஞனிடம் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சோதனையின் போது கஜமுத்துக்கள் மீட்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை சட்ட நடவடிக்கைக்காக ஆஜர்படுத்த அம்பாறை தலைமையக பொலிஸாரிடம் விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்துள்ளனர்.