13 ஆம் திருத்தத்தை அனைத்து கட்சிகளும் நல்ல நோக்கதில் ஆராய்ந்து செயற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்!

அரசியலமைப்பின் 13ஆம் திருத்தம் தொடர்பில் நல்ல நோக்கத்துடன் ஆராய்ந்து அதனை செயல்வலுப்பெறச் செய்ய அனைவரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதற்காக அரசியல் கட்சிகள் 13தொடர்பான நிலைப்பாட்டை விரைவாக ஜனாதிபதிக்கு தெரிவிக்க வேண்டும். நாட்டுக்கு பாதிப்பான எந்த விடயத்தையும் ஜனாதிபதி முன்னெடுக்கப்போவதில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் அசோக்க தனவங்ஷ தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

1087இல் இலங்கை இந்திய ஒப்பந்தத்துடன் அதிகார பரவலாக்கத்துகாக 13ஆம் திருத்தம் நாட்டு்க்கு அறிமுகமாக்கப்பட்டது.

தேர்தல் இடம்பெற்றோ இல்லாமலோ மாகாணசபை முறைமை 36 வருடங்கள் இந்நாட்டுக்குள் செயற்பட்டிருக்கிறது. தற்போதும் அதிகமான அரசியல் கட்சிகள் மற்றும் தனிநபர் குழுக்களால் 13ஆம் திருத்தத்தை செயல் வலுப்பெறச் செய்யுமாறு கோரிக்கை விடுத்திருக்கிறனர். வேறு சிலர் 13ஆம் திருத்தத்தை செயற்படுத்த வேண்டாம் என தெரிவிக்கின்றனர்.

அதனால் சட்டத்தினால் அனுமதிக்கப்பட்ட விடயம் என்பதனால் மீண்டும் இது தொடர்பாக கலந்துரையாட ஜனாதிபதி சர்வகட்சி மாநாட்டை கூட்டி இருந்தார். மக்கள் விடுதலை முன்னணியை தவிர ஏனைய கட்சிகள் இதில் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

இது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வந்ததால். 13தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ள பாராளுமன்றத்துக்கு அதிகாரம் இருக்கிறது. அதனால் பாராளுமன்றத்தில் பலந்துரையாடி இறுதி தீர்மானம் மேற்கொ்ளள முடியும் என ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

அதன் பிரகாரம் 13தொடர்பாக கட்சிகள் தங்களின் நிலைப்பாட்டை எழுத்துமூலம் அறியத்தருமாறு ஜனாதிபதி கோரிக்கை விடுத்திருக்கிறார். அதன் பின்னர் இந்த பிரேரணைகளை அடிப்படையாகக்கொண்டு கலந்துரையாட தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் ஒருசிலர் 13ஆம் திருத்தத்தை தற்போது இருக்கும் முறையிலேயே செயற்படுத்துமாறு தெரிவித்து வருகின்றனர். நாங்கள் தற்போது வாழும் நவீன காலத்தில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. எமது வாழ்க்கை ஓட்டத்திலும் தொழிநுட்ப ரீதியிலான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறன. அதன் பிரகாரம் காலத்துக்கு ஏற்ற மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதில் எந்த தவறும் இல்லை.

அதனால் 13ஆம் திருத்தம் தொடர்பாக அனைத்து கட்சிகளும் நல்ல நோக்குடன் பார்த்து அதனை செயற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த தீர்மானத்தை ஜனாதிபதி மேற்கொள்ளப் போவதில்லை என்றார்.