ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுக் கடந்த- 31 ஆண்டுகளாகத் தமிழ் அரசியல் கைதியாகச் சிறையில் வாடும் திருகோணமலை தோப்பூர் மூதுரைச் சேர்ந்த கதிர்காமத்தம்பி சிவகுமார் என்பவரின் ஒரே உறவான சுப்பிரமணியம் கமலாதேவி தனது 79 ஆவது வயதில் புதன்கிழமை (11.03.2026) புற்றுநோயால் உயிரிழந்துள்ளார்.
சிறுவயதிலே தாய், தந்தையை இழந்த சகோதரனை தாய், தந்தை நிலையிலிருந்து வளர்த்தெடுத்த சகோதரியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தாய்-தந்தை, குடும்பம், உறவு என எவருமற்ற தனது தம்பியை தான் வாழும் காலத்திலேயே சிறை மீட்டுவிட வேண்டும் என்று அயராது பாடுபட்டு வந்த அந்த ஒற்றைச் சகோதரி நிறைவேறாக் கனவோடு நீள்துயில் கொண்டார். அவரது இறுதி அஞ்சலி நிகழ்வுகள் வியாழக்கிழமை (12) இடம்பெற்றன.





