50 மின்சார பேருந்துகளை இறக்குமதி செய்வதற்கு போக்குவரத்து அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் உதவியுடன் இந்த பேருந்துகளை இறக்குமதி செய்யப்படவுள்ளதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.
மின்சார பேருந்துகளை இறக்குமதி செய்யப்படும் வரை 50 சொகுசு பேருந்துகளை இறக்குமதி செய்யப்படும் என கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.