ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் மறுபரிசீலனைப்  பெறுபேறுகளை வெளியிடுவதற்குப் பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

இன்று சனிக்கிழமை (17) பெற்றுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk ஆகிய தளங்களுக்குச் சென்று, பரீட்சை சுட்டெண்ணை  உள்ளீடு செய்வதன் மூலம் பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

பெறுபேறுகள் தொடர்பில் ஏதேனும் வினவல்கள் இருப்பின், பாடசாலைப் பரீட்சைகள் அமைப்பாக்கம் மற்றும் பெறுபேறுகள் கிளையின் 0112784208, 0112784537 அல்லது 0112785922 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.