கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தில் 7 புதிய பிரிவுகள் நிறுவல்
Ad Space
Ad Space
கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்காக ஏழு புதிய பிரிவுகள் நிறுவப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொள்முதல் தணிக்கை, சிறப்பு விசாரணை அறிக்கைகள் , சுற்றுச்சூழல் தணிக்கை மற்றும் செயல்திறன் தணிக்கை உள்ளிட்ட பிரிவுகள் இதில் அடங்குகின்றன.
இந்தப் புதிய பிரிவுகளின் ஸ்தாபிப்பதன் மூலம், தற்போது பொதுவான தணிக்கை செயல்முறையின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள் இனி அந்தந்த தணிக்கைப் பிரிவுகளுக்கு நேரடியாக ஒதுக்கப்படும் என்றும், இதனால் தணிக்கை செயல்பாடுகளை மிகவும் திறமையாகவும் பயனுள்ளதாகவும் முன்னெடுக்க முடியும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கு இணையாக, கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தில் தற்போது நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக 250 புதிய அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தேசிய தணிக்கை ஆணைக்குழுவினால் இந்த ஆட்சேர்ப்புகளுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
Ad Space
Ad Space