மாகாண சபைத் தேர்தலை நடத்தக் கோரி கண்டியில் சுவரொட்டி காட்சிப்படுத்தும் புதிய வேலைத்திட்டம்!
Ad Space
Ad Space
மாகாண சபைத் தேர்தலை விரைந்து நடாத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி, 'கஃபே' (CaFFE) அமைப்பினால் நாடு தழுவிய ரீதியில் பாரிய கையெழுத்துச் சேகரிக்கும் விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இப்போராட்டத்தை மக்கள் மத்தியில் மேலும் பலப்படுத்தும் நோக்கில், 'கஃபே' அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களினால் நாடு முழுவதும் சுவரொட்டிகளைக் காட்சிப்படுத்தும் புதிய வேலைத்திட்டம் தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, கண்டி மாவட்டத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் பொது இடங்களை மையப்படுத்தி இந்தச் சுவரொட்டிப் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
Ad Space
Ad Space